• Nov 19 2024

சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலி, 44 பேர் காயம்..!samugammedia

Tharun / Feb 24th 2024, 5:31 pm
image

சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 15 பேர் தீயில் கருகிப் பலியாகியுள்ளதுடன் மற்றும் 44 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் 15 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 44க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் முதல் தளத்தில் மின் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்ததுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய தீ விபத்து இதுவாகும். கடந்த ஜனவரி 24 அன்று கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஜின்யு நகரில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலி, 44 பேர் காயம்.samugammedia சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 15 பேர் தீயில் கருகிப் பலியாகியுள்ளதுடன் மற்றும் 44 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் 15 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 44க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் முதல் தளத்தில் மின் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்ததுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய தீ விபத்து இதுவாகும். கடந்த ஜனவரி 24 அன்று கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஜின்யு நகரில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement