• Sep 21 2024

சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழும் 1.5 மில்லியன் மக்கள்- வெளியான திடுக்கிடும் தகவல்! samugammedia

Tamil nila / Apr 6th 2023, 5:55 pm
image

Advertisement

ஜப்பானில் சுமார் 1.5 மில்லியன் பேர் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வதாக அந்நாட்டு அரசாங்கம் நடத்திய புதிய ஆய்வின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 

அவர்கள் அனைவரும் வேலை செய்யும் வயதுடையவர்கள் என்பதுடன், 5 இல் ஒருவர், தாங்கள் சமூகத்துடன் ஒன்றி வாழாமைக்கு COVID-19 கிருமிப் பரவலைக் காரணமாகக் கூறியுள்ளனர்.

ஜப்பானிய மொழியில் "hikikomori" என்று அழைக்கப்படும் அந்தப் போக்கு பதின்ம வயதினர் முதல் முதியோர் வரை அனைவரையும் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு வேலையின்மை, மனச்சோர்வு, பள்ளியில் அல்லது அலுவலகத்தில் துன்புறுத்தல் ஆகியவை காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது. 

அவ்வாறு சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வோரில் சிலர் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே வெளியே செல்வதாகவும் மற்றுஞ்சிலர் வீட்டைவிட்டு வெளியேறுவதே அரிது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழும் 1.5 மில்லியன் மக்கள்- வெளியான திடுக்கிடும் தகவல் samugammedia ஜப்பானில் சுமார் 1.5 மில்லியன் பேர் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வதாக அந்நாட்டு அரசாங்கம் நடத்திய புதிய ஆய்வின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வேலை செய்யும் வயதுடையவர்கள் என்பதுடன், 5 இல் ஒருவர், தாங்கள் சமூகத்துடன் ஒன்றி வாழாமைக்கு COVID-19 கிருமிப் பரவலைக் காரணமாகக் கூறியுள்ளனர்.ஜப்பானிய மொழியில் "hikikomori" என்று அழைக்கப்படும் அந்தப் போக்கு பதின்ம வயதினர் முதல் முதியோர் வரை அனைவரையும் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு வேலையின்மை, மனச்சோர்வு, பள்ளியில் அல்லது அலுவலகத்தில் துன்புறுத்தல் ஆகியவை காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வோரில் சிலர் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே வெளியே செல்வதாகவும் மற்றுஞ்சிலர் வீட்டைவிட்டு வெளியேறுவதே அரிது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement