• Nov 14 2024

யுத்தம் முடிந்து 15 வருடங்கள்...! சிங்கள அரசில் எமக்கு நம்பிக்கை இல்லை...!சர்வதேச விசாரணையே எமக்கு தேவை- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்து...!

Sharmi / May 30th 2024, 1:56 pm
image

யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தராத  சிங்கள அரசு  தமிழர்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை.எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவை.என போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இன்று வியாழக்கிழமை (30) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி நாங்கள் 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அரசாங்கம் இதுவரை எமக்கு உரிய தீர்வை வழங்கவில்லை.

தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.மேலும் கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அரசு கூறுகிறது.

எமக்கு கலப்பு நீதிமன்றத்தில் நம்பிக்கையே இல்லை.எமது ஒரே முடிவு சர்வதேச விசாரணையே எமக்கு தேவை.

வேறு எந்த தீர்விலும் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே எமக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்.இந்த நாட்டின் ஜனாதிபதியே இப்பிரச்சினைக்கு காரணமாக இருந்தவர்.

தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி இன்று பல வருடங்கள் கடந்து விட்டது.

ஆனால் இதுவரை ஒரு வித அனுசரணையும் அவர் செய்யவில்லை.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மீண்டும் அவர் ஜனாதிபதியாக வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்பதில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க,சஜித் பிரேமதாச,அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை.

இவர்கள் மூவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தொடர்பில் எதையும் செய்ய மாட்டார்கள்.

யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்காத சிங்கள அரசு எங்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை.

எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவை.என போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  தெரிவித்தனர்.


யுத்தம் முடிந்து 15 வருடங்கள். சிங்கள அரசில் எமக்கு நம்பிக்கை இல்லை.சர்வதேச விசாரணையே எமக்கு தேவை- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்து. யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தராத  சிங்கள அரசு  தமிழர்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை.எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவை.என போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  தெரிவித்தனர்.மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இன்று வியாழக்கிழமை (30) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வாறு தெரிவித்தனர்.அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி நாங்கள் 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அரசாங்கம் இதுவரை எமக்கு உரிய தீர்வை வழங்கவில்லை.தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.மேலும் கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அரசு கூறுகிறது.எமக்கு கலப்பு நீதிமன்றத்தில் நம்பிக்கையே இல்லை.எமது ஒரே முடிவு சர்வதேச விசாரணையே எமக்கு தேவை.வேறு எந்த தீர்விலும் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே எமக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்.இந்த நாட்டின் ஜனாதிபதியே இப்பிரச்சினைக்கு காரணமாக இருந்தவர்.தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி இன்று பல வருடங்கள் கடந்து விட்டது.ஆனால் இதுவரை ஒரு வித அனுசரணையும் அவர் செய்யவில்லை.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.மீண்டும் அவர் ஜனாதிபதியாக வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்பதில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க,சஜித் பிரேமதாச,அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை.இவர்கள் மூவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தொடர்பில் எதையும் செய்ய மாட்டார்கள்.யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்காத சிங்கள அரசு எங்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை.எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவை.என போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement