• Sep 20 2024

முல்லைத்தீவில் 1,506 அரச உத்தியோகத்தர்கள் ஜனாதிபதித் தேர்தல் கடமையில்..!

Sharmi / Sep 17th 2024, 3:28 pm
image

Advertisement

முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1,506 அரச உத்தியோகத்தர்கள் , 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக  முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும் , மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(17) இடம்பெற்றது. 

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் தற்போது நிறைவடைந்திருக்கின்றது.

குறிப்பாக எங்களுடைய மாவட்டத்திலே 86,889 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். 137 வாக்களிப்பு நிலையங்களிலே வாக்களிக்கின்ற பணி இடம்பெற இருக்கின்றது.

தேர்தல் பணிகளுக்காக சுமார் 1506 அரச அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 500 பொலிஸார் ஈடுபட இருக்கிறார்கள். 

137 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்களிக்கும் பெட்டிகள் 21 ஆம் திகதி மாலை முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலயத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்கே அமைக்கப்பட்டிருக்கின்ற  8 வாக்கு எண்ணும் பணி நிலையங்களில் வாக்கு கணக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது. 

தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றவர்கள் தங்களுடைய வாக்காளர் அட்டைகளை கொண்டுவருதல் வேண்டும்.

இருப்பினும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிப்பு நிலையங்களில் தங்களுடைய வாக்குகளை அளிக்க முடியும். 

விஷேடமாக இம்முறை உடல் வலிமை இழப்பிற்கு உள்ளாகி இருக்கின்றவர்களுக்கு விஷேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

உடல் வலிமை இழந்தவர்கள் தங்களுடன் உதவியாளர் ஒருவரையும் அழைத்துவர முடியும். அதற்குரிய தகுதி சான்றிதழை கிராம அலுவலர் ஊடாக பெற்று வாக்களிப்பு நிலையங்களிற்கு வர முடியும். 

வாக்களிப்பு நிலையங்களிற்கு வருகை தந்தவர்கள் வாக்கு சாவடிக்கு இடைப்பட்ட தூரங்களுக்கு நடந்து செல்ல முடியாதவர்களுக்கு முச்சக்கர வண்டி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மேலும் தெரிவித்தார்.


முல்லைத்தீவில் 1,506 அரச உத்தியோகத்தர்கள் ஜனாதிபதித் தேர்தல் கடமையில். முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1,506 அரச உத்தியோகத்தர்கள் , 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக  முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும் , மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(17) இடம்பெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் தற்போது நிறைவடைந்திருக்கின்றது.குறிப்பாக எங்களுடைய மாவட்டத்திலே 86,889 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். 137 வாக்களிப்பு நிலையங்களிலே வாக்களிக்கின்ற பணி இடம்பெற இருக்கின்றது.தேர்தல் பணிகளுக்காக சுமார் 1506 அரச அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 500 பொலிஸார் ஈடுபட இருக்கிறார்கள். 137 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்களிக்கும் பெட்டிகள் 21 ஆம் திகதி மாலை முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலயத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்கே அமைக்கப்பட்டிருக்கின்ற  8 வாக்கு எண்ணும் பணி நிலையங்களில் வாக்கு கணக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது. தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றவர்கள் தங்களுடைய வாக்காளர் அட்டைகளை கொண்டுவருதல் வேண்டும். இருப்பினும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிப்பு நிலையங்களில் தங்களுடைய வாக்குகளை அளிக்க முடியும். விஷேடமாக இம்முறை உடல் வலிமை இழப்பிற்கு உள்ளாகி இருக்கின்றவர்களுக்கு விஷேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. உடல் வலிமை இழந்தவர்கள் தங்களுடன் உதவியாளர் ஒருவரையும் அழைத்துவர முடியும். அதற்குரிய தகுதி சான்றிதழை கிராம அலுவலர் ஊடாக பெற்று வாக்களிப்பு நிலையங்களிற்கு வர முடியும். வாக்களிப்பு நிலையங்களிற்கு வருகை தந்தவர்கள் வாக்கு சாவடிக்கு இடைப்பட்ட தூரங்களுக்கு நடந்து செல்ல முடியாதவர்களுக்கு முச்சக்கர வண்டி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement