• Feb 04 2025

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பொதுமன்னிப்பில் 16 கைதிகள் விடுதலை

Chithra / Feb 4th 2025, 11:03 am
image

 

77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று விடுதலை  செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த 16 கைதிகள்  பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில்  இந்நிகழ்வு நடைபெற்றது.

இதேவேளை 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகள் இன்று விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


மட்டக்களப்பு சிறைச்சாலையில் பொதுமன்னிப்பில் 16 கைதிகள் விடுதலை  77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று விடுதலை  செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த 16 கைதிகள்  பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில்  இந்நிகழ்வு நடைபெற்றது.இதேவேளை 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகள் இன்று விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement