• Nov 17 2024

இலங்கையை உலுக்கிய கார் பந்தய விபத்து - சிகிச்சை பெற்றுவந்த 16 வயது சிறுமியும் சாவு..!

Chithra / May 16th 2024, 8:32 am
image

 

தியத்தலாவ கார் ஓட்டப்பந்தயத்தின் போது இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து, பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தியத்தலாவ - கலெதந்த, ஹெலகெதர பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.பி. சட்சராணி சார்மிந்தி என்ற 16 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, தியத்தலாவ கார் ஓட்டப்பந்தய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 காரோட்ட பந்தய போட்டியின் போது இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

இந்த போட்டியில் பங்குபற்றிய 1500 சிசி பந்தய கார் ஒன்று பந்தய பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

இந்த விபத்தில் 8 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்திருந்ததுடன், 21 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த நிலையில், பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை உலுக்கிய கார் பந்தய விபத்து - சிகிச்சை பெற்றுவந்த 16 வயது சிறுமியும் சாவு.  தியத்தலாவ கார் ஓட்டப்பந்தயத்தின் போது இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து, பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தியத்தலாவ - கலெதந்த, ஹெலகெதர பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.பி. சட்சராணி சார்மிந்தி என்ற 16 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதற்கமைய, தியத்தலாவ கார் ஓட்டப்பந்தய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 காரோட்ட பந்தய போட்டியின் போது இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.இந்த போட்டியில் பங்குபற்றிய 1500 சிசி பந்தய கார் ஒன்று பந்தய பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.இந்த விபத்தில் 8 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்திருந்ததுடன், 21 பேர் காயமடைந்திருந்தனர்.இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த நிலையில், பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement