• Apr 05 2025

திடீர் பணிப்புறக்கணிப்பு - 17 தொழிற்சங்கங்களின் அதிரடித் தீர்மானம்...!

Chithra / Jan 29th 2024, 8:33 am
image

 

அரச நிறைவேற்று அதிகாரி சேவை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

வேதன முரண்பாடுகளை தீர்த்தல், அடிப்படை வேதனத்தை உயர்த்துதல் மற்றும் அதிகரித்துள்ள வரிச்சுமையை குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி அரச பொறியியலாளர் சங்கம், ஆயுர்வேத உத்தியோகத்தர் சங்கம், கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம், 

கட்டட நிபுணர்கள் சங்கம், உள்நாட்டு வருமானவரி தொழிற்சங்க ஒன்றியம், கணக்காளர் சேவைகள் சங்கம் உட்பட 17 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்டோர் குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகயீன விடுமுறையை அறிவித்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ஒன்றிணைந்த அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இன்றைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள விசேட கூட்டமொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் பணிப்புறக்கணிப்பு - 17 தொழிற்சங்கங்களின் அதிரடித் தீர்மானம்.  அரச நிறைவேற்று அதிகாரி சேவை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.வேதன முரண்பாடுகளை தீர்த்தல், அடிப்படை வேதனத்தை உயர்த்துதல் மற்றும் அதிகரித்துள்ள வரிச்சுமையை குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இதன்படி அரச பொறியியலாளர் சங்கம், ஆயுர்வேத உத்தியோகத்தர் சங்கம், கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம், கட்டட நிபுணர்கள் சங்கம், உள்நாட்டு வருமானவரி தொழிற்சங்க ஒன்றியம், கணக்காளர் சேவைகள் சங்கம் உட்பட 17 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்டோர் குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகயீன விடுமுறையை அறிவித்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ஒன்றிணைந்த அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இன்றைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள விசேட கூட்டமொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now