• Oct 09 2024

தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 17 வயது சிறுவன் கொலை - தப்பியோடிய சந்தேகநபர்களுக்கு வலைவீச்சு

Chithra / Oct 2nd 2024, 1:11 pm
image

Advertisement

 

மஹவெல, மடவல பிரதேசத்தில் பொல்லால் மற்றும் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மடவல பிரதேசத்தைச்  சேர்ந்த 55 வயதுடைய  சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 17 வயது சிறுவன் கொலை - தப்பியோடிய சந்தேகநபர்களுக்கு வலைவீச்சு  மஹவெல, மடவல பிரதேசத்தில் பொல்லால் மற்றும் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் மடவல பிரதேசத்தைச்  சேர்ந்த 55 வயதுடைய  சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஏனைய சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement