• Oct 09 2024

மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு யாழில் விசேட நிகழ்வு..!

Sharmi / Oct 2nd 2024, 1:10 pm
image

Advertisement

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்றையதினம்(02) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் இந்திய துணைத் தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருள், மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.       

இதேவேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கர வண்டி பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் மரநடுகையும்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு யாழில் விசேட நிகழ்வு. இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்றையதினம்(02) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.இந் நிகழ்வில் இந்திய துணைத் தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருள், மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.       இதேவேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கர வண்டி பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டது.அத்துடன், யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் மரநடுகையும்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement