யாழ்ப்பாணத்தை சேர்ந்த யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மாணவன் குகதாஸ் மாதுலன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
குறித்த போட்டியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனான மாதுலன், அவசரமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
யாழ் மாலிங்க என அழைக்கப்படும் 17 வயதான யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் மாணவனான குகதாஸ் மாதுளனின் யோக்கர் பந்து வீச்சு பலரது கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான லசித் மாலிங்கவின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் தற்போது ஐ.பி.எல் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத்தெரிய வருகிறது.
அதாவது கிரிக்கெட் வீரர் மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட குகதாஸ் மதுலன், போட்டித் தொடரில் வீசிய யார்க்கர் (YORKER) பந்தை எம்.எஸ்.தோனி பார்த்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைக்க பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தோணியின் கவனத்தை ஈர்த்த 17 வயது யாழ்ப்பாண மாணவன் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்துவீச்சாளராகவும் இணைவு. யாழ்ப்பாணத்தை சேர்ந்த யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மாணவன் குகதாஸ் மாதுலன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.குறித்த போட்டியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனான மாதுலன், அவசரமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ் மாலிங்க என அழைக்கப்படும் 17 வயதான யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் மாணவனான குகதாஸ் மாதுளனின் யோக்கர் பந்து வீச்சு பலரது கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான லசித் மாலிங்கவின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் தற்போது ஐ.பி.எல் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத்தெரிய வருகிறது.அதாவது கிரிக்கெட் வீரர் மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட குகதாஸ் மதுலன், போட்டித் தொடரில் வீசிய யார்க்கர் (YORKER) பந்தை எம்.எஸ்.தோனி பார்த்ததாக கூறப்படுகிறது.மேலும், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைக்க பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.