• May 20 2024

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாய் வேதனம்..? வெளியான தகவல்

Chithra / Jan 6th 2024, 9:34 am
image

Advertisement


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாய் வேதனம் வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முன்னதாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்த பணிப்புரையை வழங்கியிருந்தார்.

அதேநேரம் பெருந்தோட்ட மக்களுக்கான வேதனம் தொடர்பில் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அறியப்படுத்துமாறும் ஜனாதிபதி அந்த கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் பெருந்தோட்ட நிறுவனங்கள் இதுவரையில் ஜனாதிபதிக்கு தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ்  தெரிவித்தார்.

இந்தநிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, தொழில் அமைச்சில் எதிர்வரும் 09ஆம் திகதி கூடவுள்ளது.

தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாய் வேதனம். வெளியான தகவல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாய் வேதனம் வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முன்னதாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்த பணிப்புரையை வழங்கியிருந்தார்.அதேநேரம் பெருந்தோட்ட மக்களுக்கான வேதனம் தொடர்பில் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அறியப்படுத்துமாறும் ஜனாதிபதி அந்த கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டிருந்தார்.எவ்வாறாயினும் பெருந்தோட்ட நிறுவனங்கள் இதுவரையில் ஜனாதிபதிக்கு தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ்  தெரிவித்தார்.இந்தநிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, தொழில் அமைச்சில் எதிர்வரும் 09ஆம் திகதி கூடவுள்ளது.தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement