• May 20 2024

ஆஸ்திரேலியாவின் சீர்குலைந்த புலம்பெயர்வு அமைப்பு முறையால் தற்காலிக தொழிலாளர்களாக 18 லட்சம் வெளிநாட்டினர்! samugammedia

Tamil nila / May 5th 2023, 10:50 pm
image

Advertisement

ஆஸ்திரேலியாவின் சீர்குலைந்த புலம்பெயர்வு அமைப்புமுறை 18 லட்சம் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக தற்காலிகமாக இருப்பதை ஊக்குவிக்கிறது என புலம்பெயர்வு மதிப்பாய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இது நிரந்தர புலம்பெயர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பட்டினால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த புலம்பெயர்வு மதிப்பாய்வை அண்மையில் வெளியிட்ட ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல், புலம்பெயர்வு அமைப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் தேவை என வலியுறுத்தியிருக்கிறார். இந்த அமைப்புமுறையில் உள்ள சிக்கல்களை ஒட்டு வேலை செய்து சரி செய்ய முடியாது என அவர் கூறியிருக்கிறார். 

ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான அரசாங்கங்கள் நிரந்தர புலம்பெயர்வு மீது கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் தற்போதைய நிலையில் நிரந்தர புலம்பெயர்வின் கீழ் ஆண்டுக்கு 195,000 வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

அதே சமயம், தேவையைப் பொறுத்து தற்காலிக தொழிலாளர்கள் புலம்பெயர்வு நிகழ்ந்ததாகவும் இது 2007 முதல் இரண்டு மடங்கு அதிகரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தற்போது 18 லட்சம் வெளிநாட்டினர் தற்காலிக தொழிலாளர்கள் அந்நாட்டில் இருக்கின்றனர். 

தற்காலிக புலம்பெயர்வு நிரந்தரமாக அதிகரிப்பது என்பது ஆஸ்திரேலியாவுக்கும் குடியேறிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்த மதிப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஆஸ்திரேலியாவின் திறன் தேவை பட்டியல்கள், நிறுவன ஸ்பான்சர் திட்டங்கள் காலாவதியானதாக, வலுவான ஆதாரத்தின் அடிப்படையிலானதாக இல்லாமல் இருக்கிறது என புலம்பெயர்வு மதிப்பாய்வில் கூறப்பட்டுள்ளது.  



ஆஸ்திரேலியாவின் சீர்குலைந்த புலம்பெயர்வு அமைப்பு முறையால் தற்காலிக தொழிலாளர்களாக 18 லட்சம் வெளிநாட்டினர் samugammedia ஆஸ்திரேலியாவின் சீர்குலைந்த புலம்பெயர்வு அமைப்புமுறை 18 லட்சம் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக தற்காலிகமாக இருப்பதை ஊக்குவிக்கிறது என புலம்பெயர்வு மதிப்பாய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இது நிரந்தர புலம்பெயர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பட்டினால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புலம்பெயர்வு மதிப்பாய்வை அண்மையில் வெளியிட்ட ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல், புலம்பெயர்வு அமைப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் தேவை என வலியுறுத்தியிருக்கிறார். இந்த அமைப்புமுறையில் உள்ள சிக்கல்களை ஒட்டு வேலை செய்து சரி செய்ய முடியாது என அவர் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான அரசாங்கங்கள் நிரந்தர புலம்பெயர்வு மீது கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் தற்போதைய நிலையில் நிரந்தர புலம்பெயர்வின் கீழ் ஆண்டுக்கு 195,000 வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், தேவையைப் பொறுத்து தற்காலிக தொழிலாளர்கள் புலம்பெயர்வு நிகழ்ந்ததாகவும் இது 2007 முதல் இரண்டு மடங்கு அதிகரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தற்போது 18 லட்சம் வெளிநாட்டினர் தற்காலிக தொழிலாளர்கள் அந்நாட்டில் இருக்கின்றனர். தற்காலிக புலம்பெயர்வு நிரந்தரமாக அதிகரிப்பது என்பது ஆஸ்திரேலியாவுக்கும் குடியேறிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்த மதிப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆஸ்திரேலியாவின் திறன் தேவை பட்டியல்கள், நிறுவன ஸ்பான்சர் திட்டங்கள் காலாவதியானதாக, வலுவான ஆதாரத்தின் அடிப்படையிலானதாக இல்லாமல் இருக்கிறது என புலம்பெயர்வு மதிப்பாய்வில் கூறப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement