• Nov 22 2024

வடக்கு மாகாணத்தில் கனமழையால் 19 ஆயிரம் பேர் பாதிப்பு...!samugammedia

Sharmi / Dec 21st 2023, 8:41 am
image

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு  அறிக்கையிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் தொடர் மழை காரணமாக வடக்கின் 5 மாவட்டங்களும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இதில் உச்சபட்சமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 715 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 572 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 372 குடும்பங்களைச் சேர்ந்த  6 ஆயிரத்து 904 பேர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதேநேரம் மன்னார் மாவட்டத்தில் 628 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 271 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 279 குடும்பங்களைச் சேர்ந்த 878 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கமைய வடக்கு மாகாணத்தில் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று வடக்கின் 5 மாவட்டங்களின் அரச அதிபர்களும் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் கனமழையால் 19 ஆயிரம் பேர் பாதிப்பு.samugammedia வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு  அறிக்கையிட்டுள்ளனர்.வடக்கு மாகாணத்தில் தொடர் மழை காரணமாக வடக்கின் 5 மாவட்டங்களும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.இதில் உச்சபட்சமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 715 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 572 பேர் பாதிப்படைந்துள்ளனர்.இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 372 குடும்பங்களைச் சேர்ந்த  6 ஆயிரத்து 904 பேர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.இதேநேரம் மன்னார் மாவட்டத்தில் 628 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 271 பேர் பாதிப்படைந்துள்ளனர்.வவுனியா மாவட்டத்தில் 279 குடும்பங்களைச் சேர்ந்த 878 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.இதற்கமைய வடக்கு மாகாணத்தில் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று வடக்கின் 5 மாவட்டங்களின் அரச அதிபர்களும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement