• Feb 01 2025

கடும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 193 பேர் பாதிப்பு!

Chithra / Jan 31st 2025, 12:10 pm
image


கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

22 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை மற்றும் ஹகுரான்கெத பகுதிகளில் சுமார் 13 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ஊடக மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், அந்த சாலைகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹங்குரான்கெத்த பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்ட மண்சரிவில் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

கடும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 193 பேர் பாதிப்பு கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.22 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வலப்பனை மற்றும் ஹகுரான்கெத பகுதிகளில் சுமார் 13 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ஊடக மையம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த சாலைகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஹங்குரான்கெத்த பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்ட மண்சரிவில் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement