• Nov 28 2024

ஆழிப்பேரலை கோரத் தாண்டவத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...! புதுக்குடியிருப்பில் அஞ்சலி...!samugammedia

Sharmi / Dec 26th 2023, 12:28 pm
image

ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் புதுககுடியிருப்பில் இன்று காலை இடம்பெற்றது


கடந்த 2004 ம் ஆண்டுஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று பல்வேறு இடங்களில் நினைவு கூறப்பட்டு வருகின்றது.


அந்தவகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த உறவுகளில் ஒரு தொகுதியினரின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி ஓரத்திலே புதுக் குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று(26) காலை 8 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது


சுனாமியில் தங்களது உறவுகளை இழந்த  உறவுகளால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உறவுகளுக்காக சுடரேற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது


நிகழ்வில்  உயிரிழந்தவர்களின் உறவினர்கள்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் ,பொதுமக்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் , நலன்விரும்பிகள்  என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.




ஆழிப்பேரலை கோரத் தாண்டவத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. புதுக்குடியிருப்பில் அஞ்சலி.samugammedia ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் புதுககுடியிருப்பில் இன்று காலை இடம்பெற்றதுகடந்த 2004 ஆம் ஆண்டுஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று பல்வேறு இடங்களில் நினைவு கூறப்பட்டு வருகின்றது.அந்தவகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த உறவுகளில் ஒரு தொகுதியினரின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி ஓரத்திலே புதுக் குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று(26) காலை 8 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றதுசுனாமியில் தங்களது உறவுகளை இழந்த  உறவுகளால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உறவுகளுக்காக சுடரேற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டதுநிகழ்வில்  உயிரிழந்தவர்களின் உறவினர்கள்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் ,பொதுமக்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் , நலன்விரும்பிகள்  என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement