வவுனியா, நெளுக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட இராசேந்திரங்குளம் அரசு தமிழ் கலவன் பாடசாலையின் பேண்ட் வாத்தியக் கருவிகள் மற்றும் ஏனைய மூலதனப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக 200,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களினால், மாவட்ட அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்தின் (DCB) கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ நிதி ஒதுக்கீட்டு அனுமதி கடிதம் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலை மாணவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த பேண்ட் வாத்தியக் கருவிகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் விரைவில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலைக்கு 2 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு வவுனியா, நெளுக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட இராசேந்திரங்குளம் அரசு தமிழ் கலவன் பாடசாலையின் பேண்ட் வாத்தியக் கருவிகள் மற்றும் ஏனைய மூலதனப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக 200,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களினால், மாவட்ட அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்தின் (DCB) கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தியோகபூர்வ நிதி ஒதுக்கீட்டு அனுமதி கடிதம் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.இவ் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலை மாணவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த பேண்ட் வாத்தியக் கருவிகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் விரைவில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.