எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 20 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத் துறையுடன் இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள கலந்துரையாடல் தோல்வியுற்றால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழிற்சங்கத் தலைவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
சுகாதார நிபுணர்களின் கொடுப்பனவுகளை மீளாய்வு செய்வதற்கு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.
அடையாள வேலைநிறுத்தத்திற்கு மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சிறுவர் மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக மருத்துவமனைகளில் வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படாது என மருத்துவமனைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாதி ஒருவரின் சம்பளம் தொடர்பில் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து தவறானது என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு (HTUA) அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார நிபுணர்களை பாதிக்கும் கணிசமான சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய 2025 வரவுசெலவுத் திட்டத்தில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் போராட்டத்தில் குதிக்கவுள்ள 20 சுகாதார தொழிற் சங்கங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 20 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.சுகாதாரத் துறையுடன் இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள கலந்துரையாடல் தோல்வியுற்றால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழிற்சங்கத் தலைவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.சுகாதார நிபுணர்களின் கொடுப்பனவுகளை மீளாய்வு செய்வதற்கு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.அடையாள வேலைநிறுத்தத்திற்கு மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.எவ்வாறாயினும், சிறுவர் மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக மருத்துவமனைகளில் வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படாது என மருத்துவமனைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.தாதி ஒருவரின் சம்பளம் தொடர்பில் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து தவறானது என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு (HTUA) அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.சுகாதார நிபுணர்களை பாதிக்கும் கணிசமான சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய 2025 வரவுசெலவுத் திட்டத்தில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.