• Dec 13 2024

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 20 எம்.பிக்கள்..! வழங்கப்பட்ட கால அவகாசம்

Chithra / Aug 13th 2024, 3:56 pm
image

  

பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொத்து விபரங்களை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

இதனை பின்பற்றாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் புதிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சொத்து விபரங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 20 எம்.பிக்கள். வழங்கப்பட்ட கால அவகாசம்   பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொத்து விபரங்களை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.இதனை பின்பற்றாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் புதிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.சொத்து விபரங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement