அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்களை தொடங்கும் காலம் தொடர்பான அறிவிப்புக்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் முதலாம் வகுப்புக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அன்றைய தினம் புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அத்துடன் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குழந்தைகளை அடையாளம் காணும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கை கல்வி அமைச்சின் விசேட சுற்றறிக்கை அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்களை தொடங்கும் காலம் தொடர்பான அறிவிப்புக்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.இதன்படி, பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் முதலாம் வகுப்புக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. இது குறித்து, விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அன்றைய தினம் புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அத்துடன் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குழந்தைகளை அடையாளம் காணும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.