வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட் எடுப்பின் துணையுடன் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி குழு நிலை ஆட்டத்தில் இந்திய அணியானது நியூஸிலாந்தை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த வெற்றியுடன் குழு ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியா, அரையிறுதி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும்.
இந்த ஆட்டம் துபாயில் மார்ச் 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதேவேளை, தோல்வியைடந்த நியூஸிலாந்து அணியானது, அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கும்.
இந்த ஆட்டமானது மார்ச் 05 ஆம் திகதி லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெறும்.
இரு அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடத்தும்.
துபாயில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் 250 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற சேஸிங்கில் நியூஸிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன் அதிகபடியாக 81 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி; 44 ஓட்டங்களால் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட் எடுப்பின் துணையுடன் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி குழு நிலை ஆட்டத்தில் இந்திய அணியானது நியூஸிலாந்தை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.இந்த வெற்றியுடன் குழு ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியா, அரையிறுதி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும்.இந்த ஆட்டம் துபாயில் மார்ச் 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.அதேவேளை, தோல்வியைடந்த நியூஸிலாந்து அணியானது, அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கும்.இந்த ஆட்டமானது மார்ச் 05 ஆம் திகதி லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெறும்.இரு அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடத்தும்.துபாயில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் 250 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற சேஸிங்கில் நியூஸிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன் அதிகபடியாக 81 ஓட்டங்களை விளாசியிருந்தார்.