• Dec 27 2024

சுனாமி கோரத்தாண்டவத்தின் 20வது ஆண்டு நினைவேந்தல்; புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு..!

Sharmi / Dec 26th 2024, 9:13 am
image

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(26) காலை 8.05 மணியளவில் புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள, புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில்  உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். 

இதனையடுத்து நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சுனாமி பேரலையில் சிக்கி உயிர்நீத்தோரின் நினைவாக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியானது, யுத்த காலத்தில் இராணுவத்தால் அழிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் ஏற்பாட்டில் புதிதாக தூபி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




சுனாமி கோரத்தாண்டவத்தின் 20வது ஆண்டு நினைவேந்தல்; புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு. ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(26) காலை 8.05 மணியளவில் புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள, புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில்  உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். இதனையடுத்து நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.சுனாமி பேரலையில் சிக்கி உயிர்நீத்தோரின் நினைவாக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியானது, யுத்த காலத்தில் இராணுவத்தால் அழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் ஏற்பாட்டில் புதிதாக தூபி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement