இலங்கை தபால் திணைக்களத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மாற்றங்களுடன் கூடிய நம்பகத்தன்மை மிக்க சேவையாக உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை தபால் தலைமையகத்தின் தற்போதைய சேவை நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில், தபால் திணைக்கள அதிகாரிகளுடன் சுகாதார அமைச்சில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது தபால் சேவையில் நிலவிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சேவையை நவீனமயப்படுத்தி தேசிய சேவையாக தரம் உயர்த்துவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும்.
விசேடமாக அரசியல் அல்லது தனிப்பட்ட தேவைகளை முன்னிறுத்தி புதிய தபால் நிலையங்களை நிறுவும் செயற்பாடு இனி ஒருபோதும் இடம்பெறாது.
தபால் சேவை தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளை உள்ளடக்கிய வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
உரிய புரிதலுடன் அதிகாரிகளும் இத்திட்டத்தை செயற்படுத்துவது அவசியம்.
குறிப்பாக சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்தி அதிக இலாபம் ஈட்டும் நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
வெளிநாட்டு உதவிகளை பெறும் நோக்கில் திட்டங்களை ஒழுங்கமைப்பது அவசியம்.
ஆகையால் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் திணைக்களத்தின் வருமான ஆதாரங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். என்றார்.
நவீன மயமாகும் இலங்கை தபால் சேவை - புதிய அரசின் தீர்மானம் இலங்கை தபால் திணைக்களத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மாற்றங்களுடன் கூடிய நம்பகத்தன்மை மிக்க சேவையாக உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இலங்கை தபால் தலைமையகத்தின் தற்போதைய சேவை நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில், தபால் திணைக்கள அதிகாரிகளுடன் சுகாதார அமைச்சில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.தற்போது தபால் சேவையில் நிலவிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சேவையை நவீனமயப்படுத்தி தேசிய சேவையாக தரம் உயர்த்துவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும்.விசேடமாக அரசியல் அல்லது தனிப்பட்ட தேவைகளை முன்னிறுத்தி புதிய தபால் நிலையங்களை நிறுவும் செயற்பாடு இனி ஒருபோதும் இடம்பெறாது. தபால் சேவை தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளை உள்ளடக்கிய வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.உரிய புரிதலுடன் அதிகாரிகளும் இத்திட்டத்தை செயற்படுத்துவது அவசியம். குறிப்பாக சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்தி அதிக இலாபம் ஈட்டும் நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.வெளிநாட்டு உதவிகளை பெறும் நோக்கில் திட்டங்களை ஒழுங்கமைப்பது அவசியம். ஆகையால் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் திணைக்களத்தின் வருமான ஆதாரங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். என்றார்.