• Oct 04 2024

போதைவஸ்து பாவனை காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் 23 வயது குடும்பஸ்தர் உயிரிழப்பு..! samugammedia

Tamil nila / Feb 2nd 2024, 10:14 pm
image

Advertisement

வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் - பேசாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விஜயகுமார் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு செலாவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இதன்போது அவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் தலைமன்னார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். அதிக போதைவஸ்து பாவனையே மரணத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



போதைவஸ்து பாவனை காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் 23 வயது குடும்பஸ்தர் உயிரிழப்பு. samugammedia வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் - பேசாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விஜயகுமார் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு செலாவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இதன்போது அவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் தலைமன்னார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். அதிக போதைவஸ்து பாவனையே மரணத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement