• Jan 25 2025

நாட்டில் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம்..!

Sharmi / Jan 15th 2025, 11:38 am
image

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களின் நிலவரத்தின் அடிப்படையில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து  பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 374 ஆகும்.

கொழும்பு மாவட்டத்திலிருந்து  304 டெங்கு நோயாளர்களும், காலி மாவட்டத்திலிருந்து  169 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்திலிருந்து  134 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் நாட்டில் 49,887 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 24 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


நாட்டில் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம். நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களின் நிலவரத்தின் அடிப்படையில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.அதன்படி, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து  பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 374 ஆகும்.கொழும்பு மாவட்டத்திலிருந்து  304 டெங்கு நோயாளர்களும், காலி மாவட்டத்திலிருந்து  169 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்திலிருந்து  134 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த 2024 ஆம் ஆண்டில் நாட்டில் 49,887 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 24 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now