உள்ளிட்ட சர்ச்சைகளுக்குள் சிக்கியதால் பாடல் வாய்ப்புகள், டப்பிங் வாய்ப்புகள் என அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கின் மற்றறொரு விசாரணையே இன்று இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் சின்மயி தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது,
நாளை என் தடை வழக்கின் மற்றொரு விசாரணைக்கு நான் செல்கிறேன். முடிந்தால் எனக்காக ஒரு பிரார்த்தனையை அனுப்புங்கள்.நன்றி.- எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த தடைகளுக்கு இடையில் இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிம்பு, நடிகை திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளியாகவுள்ள படமான ‘தக் லைஃப்’ படத்தில் பாடகி தீ பாடிய முத்தமழை பாடலை படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சின்மயி தான் பாடினார்.
சின்மயி பாடிய முத்தமழை பாடல் இணையத்தளங்களில் ட்ரெண்டாகி திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடல் சின்மயி குரலில் தான் இடம்பெற வேண்டும் என்று இரசிகர்கள் தங்களது விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சின்மயிக்கு விதிக்கப்பட்ட தடை; வழக்கின் அடுத்த விசாரணை இன்று. - எதிர்பார்ப்பில் ரசிகர்கள். பாடகி சின்மயிக்கு விதிக்கப்பட்ட தடை வழக்கின் மற்றொரு விசாரணை இன்று இடம்பெறவுள்ளது. சினிமா இசைத்துறையில் சிறந்த பாடகியாக வலம் வரும் சின்மயி ஸ்ரீபதா கடந்த சில காலமாக சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டார். MeToo சர்ச்சை, வைரமுத்து சர்ச்சை, சின்மயியை டப்பிங் யூனியலிருந்து ராதாரவி விலத்தியமைஉள்ளிட்ட சர்ச்சைகளுக்குள் சிக்கியதால் பாடல் வாய்ப்புகள், டப்பிங் வாய்ப்புகள் என அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கின் மற்றறொரு விசாரணையே இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் சின்மயி தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது, நாளை என் தடை வழக்கின் மற்றொரு விசாரணைக்கு நான் செல்கிறேன். முடிந்தால் எனக்காக ஒரு பிரார்த்தனையை அனுப்புங்கள்.நன்றி.- எனப் பதிவிட்டுள்ளார். இந்த தடைகளுக்கு இடையில் இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிம்பு, நடிகை திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளியாகவுள்ள படமான ‘தக் லைஃப்’ படத்தில் பாடகி தீ பாடிய முத்தமழை பாடலை படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சின்மயி தான் பாடினார். சின்மயி பாடிய முத்தமழை பாடல் இணையத்தளங்களில் ட்ரெண்டாகி திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில் தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடல் சின்மயி குரலில் தான் இடம்பெற வேண்டும் என்று இரசிகர்கள் தங்களது விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.