பொலிஸ் சேவையில் 2,500 பேரை அவசரமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸாரின் துன்புறுத்தல்களைக் குறைப்பதற்கான விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொலிஸாருக்கு தனியான சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொலிஸ் சேவையில் 2,500 பேர் அவசரமாக ஆட்சேர்ப்பு பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு பொலிஸ் சேவையில் 2,500 பேரை அவசரமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.பொலிஸாரின் துன்புறுத்தல்களைக் குறைப்பதற்கான விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொலிஸாருக்கு தனியான சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.