• Nov 28 2024

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 278 கைதிகள் விடுதலை..! - ஞானசாரருக்கு மன்னிப்பு இல்லை!

Chithra / May 23rd 2024, 8:16 am
image

 வெவாக் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை, மஹர சிறைச்சாலைகள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளில் பத்து பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை அவர்கள் உறவினர்கள் தடுப்புக் கூண்டுக்கு வௌியே பார்வையிடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரியிருந்தனர்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.

எனினும், வெசாக் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யப்பட உள்ள கைதிகளின் பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய மதத்திற்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் தற்பொழுது அந்த தண்டனையை அவர் அனுபவித்து வருகின்றார். 

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 278 கைதிகள் விடுதலை. - ஞானசாரருக்கு மன்னிப்பு இல்லை  வெவாக் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.வெலிக்கடை, மஹர சிறைச்சாலைகள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளில் பத்து பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை அவர்கள் உறவினர்கள் தடுப்புக் கூண்டுக்கு வௌியே பார்வையிடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரியிருந்தனர்.வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.எனினும், வெசாக் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யப்பட உள்ள கைதிகளின் பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.இஸ்லாமிய மதத்திற்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் தற்பொழுது அந்த தண்டனையை அவர் அனுபவித்து வருகின்றார். 

Advertisement

Advertisement

Advertisement