• May 13 2025

கடல் கொள்ளையர்களின் தலைவனை கைது செய்! வாழைச்சேனையில் மீனவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

Chithra / May 13th 2025, 3:02 pm
image


 

அதிகரித்துவரும் ஆழ்கடல் மீன் களவிற்கும் மீன் கொள்ளையர்களுக்கு எதிராகவும் வாழைச்சேனையில் இன்று போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தீர்வு கிடைக்கும் வரை கடல் தொழிக்கு செல்வதில்லை எனத் தெரிவித்து இன்று காலை வாழைச்சேனை மீன் பிடி துறைமுக பகுதியில் ஆழ்கடல் மீனவர் அமைப்புகளினால் இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

துறைமுகப் பகுதியில் ஒன்று கூடிய மீனவர்கள் கடல் கொள்ளையர்களின் தலைவனை கைது செய்ய வேண்டும். 

மீனவர்களின் கடல் வாழ்க்கையை கிளீன் ஸ்ரீலங்காவாக மாற்றித் தர வேண்டும், மீன் பிடித்து பிழைக்கும் எங்களுக்கு இடையூறு செய்யாதீர்கள் என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் இத் திருட்டுச் சம்பவத்தால் மீனவர்களும், படகு உரிமையாளர்களும் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின்போது, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மீனவர் சமூகம் மகஜர்களை கையளித்தனர்.

மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலை அதிகரித்தும் காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது. 


கடல் கொள்ளையர்களின் தலைவனை கைது செய் வாழைச்சேனையில் மீனவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்  அதிகரித்துவரும் ஆழ்கடல் மீன் களவிற்கும் மீன் கொள்ளையர்களுக்கு எதிராகவும் வாழைச்சேனையில் இன்று போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.தீர்வு கிடைக்கும் வரை கடல் தொழிக்கு செல்வதில்லை எனத் தெரிவித்து இன்று காலை வாழைச்சேனை மீன் பிடி துறைமுக பகுதியில் ஆழ்கடல் மீனவர் அமைப்புகளினால் இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.துறைமுகப் பகுதியில் ஒன்று கூடிய மீனவர்கள் கடல் கொள்ளையர்களின் தலைவனை கைது செய்ய வேண்டும். மீனவர்களின் கடல் வாழ்க்கையை கிளீன் ஸ்ரீலங்காவாக மாற்றித் தர வேண்டும், மீன் பிடித்து பிழைக்கும் எங்களுக்கு இடையூறு செய்யாதீர்கள் என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் இத் திருட்டுச் சம்பவத்தால் மீனவர்களும், படகு உரிமையாளர்களும் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இவ் ஆர்ப்பாட்டத்தின்போது, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மீனவர் சமூகம் மகஜர்களை கையளித்தனர்.மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலை அதிகரித்தும் காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement