• Apr 02 2025

காசாவில் 3 நாள் போர் இடைநிறுத்தம் - இஸ்ரேல்- ஹமாஸ் சம்மதம்

Anaath / Aug 30th 2024, 10:29 am
image

இஸ்ரேலும் ஹமாஸும் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

ஆயிரக்கணக்கான குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெறாமல் அவதிக்குள்ளாகிய நிலையில் அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கவில்லை என்றால் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில்  இஸ்ரேலும் ஹமாஸும் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதனால் போலியோவுக்கு எதிரான முதல் சுற்று தடுப்பூசியை வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போர் இடைநிறுத்தங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (உள்ளூர் நேரம்) நடைபெறும் என  திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காசாவில் 3 நாள் போர் இடைநிறுத்தம் - இஸ்ரேல்- ஹமாஸ் சம்மதம் இஸ்ரேலும் ஹமாஸும் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.ஆயிரக்கணக்கான குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெறாமல் அவதிக்குள்ளாகிய நிலையில் அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கவில்லை என்றால் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.இந்நிலையில்  இஸ்ரேலும் ஹமாஸும் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதனால் போலியோவுக்கு எதிரான முதல் சுற்று தடுப்பூசியை வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.அத்துடன் இதற்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.போர் இடைநிறுத்தங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (உள்ளூர் நேரம்) நடைபெறும் என  திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement