• Apr 28 2025

தேர்தல் விதிமுறைகளை மீறிய 30 வேட்பாளர்கள் அதிரடிக் கைது!

Chithra / Apr 28th 2025, 9:44 am
image


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (28) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் தேர்தல் விதிமுறையை மீறியதற்காக குறித்த வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இக்காலப்பகுதியில் 131 கட்சி ஆதரவாளர்களும், 31 வாகனங்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. 

அத்தோடு, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 313 முறைப்பாடுகளும், குற்றவியல் சம்பவங்கள் தொடர்பாக 85 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறிய 30 வேட்பாளர்கள் அதிரடிக் கைது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (28) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் தேர்தல் விதிமுறையை மீறியதற்காக குறித்த வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இக்காலப்பகுதியில் 131 கட்சி ஆதரவாளர்களும், 31 வாகனங்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அத்தோடு, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 313 முறைப்பாடுகளும், குற்றவியல் சம்பவங்கள் தொடர்பாக 85 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement