• Jan 15 2025

இலங்கையர்களின் கண்களால் உலகத்தை பார்க்கும் 3000 வெளிநாட்டவர்கள்

Chithra / Jan 14th 2025, 8:13 am
image


இலங்கையர்கள் தானமாக அளித்த கண்கள் மூலம் 3163 வெளிநாட்டினருக்கு உலகைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கண் தான மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு நாட்டில் 7144 பேர் கண் தானம் செய்ததாக இலங்கை கண் தான சங்கத்தின் மூத்த மேலாளர் ஜகத் சமன் மாதரஆரச்சி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இலங்கையில் 1,475 பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு தானமாக கிடைத்த கண்கள் பொருத்தப்பட்டுள்ளன.

20,3000 பேர் கண்களை தானம் செய்யப் பதிவு செய்துள்ளதாக ஜகத் சமன் மாதரஆரச்சி குறிப்பிட்டுள்ளார்.

தானமாக வழங்கப்பட்ட கண்களில் 1025 கண்கள் கண் அறுவை சிகிச்சை பயிற்சி பெறும் மருத்துவர்களின் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டினருக்கு தானமாக வழங்கப்பட்ட கண்கள், ஏமன், எகிப்து, கென்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பார்வையற்றோருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இலங்கை கண் தான சங்கம் கடந்த ஆண்டு 2,300 இலவச கண்புரை அறுவை சிகிச்சைகளை செய்துள்ளதாக சமன் மாதரஆரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களின் கண்களால் உலகத்தை பார்க்கும் 3000 வெளிநாட்டவர்கள் இலங்கையர்கள் தானமாக அளித்த கண்கள் மூலம் 3163 வெளிநாட்டினருக்கு உலகைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கண் தான மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.கடந்தாண்டு நாட்டில் 7144 பேர் கண் தானம் செய்ததாக இலங்கை கண் தான சங்கத்தின் மூத்த மேலாளர் ஜகத் சமன் மாதரஆரச்சி தெரிவித்தார்.கடந்த ஆண்டு இலங்கையில் 1,475 பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு தானமாக கிடைத்த கண்கள் பொருத்தப்பட்டுள்ளன.20,3000 பேர் கண்களை தானம் செய்யப் பதிவு செய்துள்ளதாக ஜகத் சமன் மாதரஆரச்சி குறிப்பிட்டுள்ளார்.தானமாக வழங்கப்பட்ட கண்களில் 1025 கண்கள் கண் அறுவை சிகிச்சை பயிற்சி பெறும் மருத்துவர்களின் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்டுள்ளன.வெளிநாட்டினருக்கு தானமாக வழங்கப்பட்ட கண்கள், ஏமன், எகிப்து, கென்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பார்வையற்றோருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.இதற்கிடையில், இலங்கை கண் தான சங்கம் கடந்த ஆண்டு 2,300 இலவச கண்புரை அறுவை சிகிச்சைகளை செய்துள்ளதாக சமன் மாதரஆரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement