• Nov 09 2026

32 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பொலிவு பெற்ற திருகோணமலை கால்நடை வைத்தியர் அலுவலகம்!

Ziya / Nov 9th 2026, 3:32 pm
image

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று (09) உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச கால்நடை வைத்தியர் டாக்டர் நர்மதா குமுதனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தனர்.

கடந்த 32 வருடங்களாக அடிப்படை வசதிகள் மற்றும் போதிய உட்கட்டமைப்பு வசதிகளின்றி இயங்கி வந்த இக்கால்நடை வைத்தியர் அலுவலகம், தற்போது 40 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தின் மூலம் நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது தேவைகள், கால்நடை வளர்ப்பு முறைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் வெவ்வேறானவையாகக் காணப்படுகின்றன.

எனவே, அனைத்துத் தரப்பினருக்கும் சமமான, இலகுவாக அணுகக்கூடிய, வினைத்திறனான கால்நடை சுகாதார மற்றும் கால்நடை அபிவிருத்திச் சேவைகளை வழங்குவது இவ்வலுவலகத்தின் முக்கிய பொறுப்பாகும் என நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் முன்னாள் மாகாணப் பணிப்பாளர் டாக்டர் முகம்மது சுல்பிகார், மேலதிக மாகாணப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எம். நதீர், கால்நடை வைத்திய நிபுணர் டாக்டர் எச்.எம். மாஹிர், மாகாணப் பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்) டாக்டர் கீதாஞ்சலி சத்தியசீலன், மாகாணக் கணக்காளர் கே. தினேஷ், திருகோணமலை மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சிபாயா நவ்ஷாத், பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் என். மதிவண்ணன் உள்ளிட்ட கால்நடை வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


32 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பொலிவு பெற்ற திருகோணமலை கால்நடை வைத்தியர் அலுவலகம் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று (09) உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச கால்நடை வைத்தியர் டாக்டர் நர்மதா குமுதனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தனர்.கடந்த 32 வருடங்களாக அடிப்படை வசதிகள் மற்றும் போதிய உட்கட்டமைப்பு வசதிகளின்றி இயங்கி வந்த இக்கால்நடை வைத்தியர் அலுவலகம், தற்போது 40 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தின் மூலம் நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது தேவைகள், கால்நடை வளர்ப்பு முறைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் வெவ்வேறானவையாகக் காணப்படுகின்றன.எனவே, அனைத்துத் தரப்பினருக்கும் சமமான, இலகுவாக அணுகக்கூடிய, வினைத்திறனான கால்நடை சுகாதார மற்றும் கால்நடை அபிவிருத்திச் சேவைகளை வழங்குவது இவ்வலுவலகத்தின் முக்கிய பொறுப்பாகும் என நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் முன்னாள் மாகாணப் பணிப்பாளர் டாக்டர் முகம்மது சுல்பிகார், மேலதிக மாகாணப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எம். நதீர், கால்நடை வைத்திய நிபுணர் டாக்டர் எச்.எம். மாஹிர், மாகாணப் பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்) டாக்டர் கீதாஞ்சலி சத்தியசீலன், மாகாணக் கணக்காளர் கே. தினேஷ், திருகோணமலை மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சிபாயா நவ்ஷாத், பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் என். மதிவண்ணன் உள்ளிட்ட கால்நடை வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement