• Jan 22 2025

சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 சிவப்பு எச்சரிக்கை கொள்கலன்கள்!

Chithra / Jan 22nd 2025, 11:44 am
image

 

கட்டாய சோதனை என அடையாளம் காணப்பட்ட, சுமார் 323 கொள்கலன்கள் முறையான சோதனையின்றி விடுவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த கொள்கலன்களுக்கு சிவப்பு முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் கூட்டமைப்பின் தலைவர் அமில சஞ்சீவ ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத மருந்துகள், மனித பயன்பாட்டிற்குத் தகுதியற்ற வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், 

சட்டவிரோத சிகரெட்டுகள், போதைப்பொருள்கள் மற்றும் துப்பாக்கிகள் போன்றவற்றை உள்ளடக்கியதான பிரச்சனைக்கு இந்த கொள்கலன்கள் இருந்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்க அதிகாரிகள் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்த அவர், யாருடைய அதிகாரம் மற்றும் அறிவுறுத்தலின் கீழ் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 சிவப்பு எச்சரிக்கை கொள்கலன்கள்  கட்டாய சோதனை என அடையாளம் காணப்பட்ட, சுமார் 323 கொள்கலன்கள் முறையான சோதனையின்றி விடுவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்த கொள்கலன்களுக்கு சிவப்பு முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் கூட்டமைப்பின் தலைவர் அமில சஞ்சீவ ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத மருந்துகள், மனித பயன்பாட்டிற்குத் தகுதியற்ற வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், சட்டவிரோத சிகரெட்டுகள், போதைப்பொருள்கள் மற்றும் துப்பாக்கிகள் போன்றவற்றை உள்ளடக்கியதான பிரச்சனைக்கு இந்த கொள்கலன்கள் இருந்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.விடுவிக்கப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்க அதிகாரிகள் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்த அவர், யாருடைய அதிகாரம் மற்றும் அறிவுறுத்தலின் கீழ் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

Advertisement

Advertisement

Advertisement