• Nov 24 2024

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 33 சுயேட்சைக் குழுக்கள், அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல்!

Chithra / Oct 9th 2024, 8:40 am
image

 

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 33 சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.

17 அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளுக்கு நேற்று (08) இறுதி வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4 ஆரம்பமாகி 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நேற்று நள்ளிரவுடன் முடிவடைய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 33 சுயேட்சைக் குழுக்கள், அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல்  2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 33 சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.17 அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளுக்கு நேற்று (08) இறுதி வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4 ஆரம்பமாகி 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.இதேவேளை, தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நேற்று நள்ளிரவுடன் முடிவடைய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement