• May 17 2024

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 33வது மனித புதைகுழி! நாடு கடந்த தமிமீழ அரசாங்கத்தால் ஐ.நாவுக்கு பறந்த அவசர கடிதம் samugammedia

Chithra / Jul 11th 2023, 7:57 pm
image

Advertisement

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வொல்கர் துர்க்,( Mr. Volker Turk ) ஐக்கிய நாடுகளின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு விசாரணை ஆணையாளர் அல்பான் அலென்கஸ்றோ (Mr. Juan Pablo Alban Alencastro) ஆகியோருக்கு கடிதங்களை தனித்தனியாக அனுப்பியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முல்லைத்தீவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு பொறுப்பெடுக்குமாறும் அதற்கு அங்கு விஜயம் செய்து கையகப்படுத்துமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

அகழ்வுப்பணி தொடர்ந்தும் நடைபெறுகையில் அதன் நடைமுறையையும், சர்வதேசக் குற்றங்களுக்கான ஆதாரத்தை நேர்மையாகப் பாதுகாக்கும் வகையில் அவசர கோரிக்கைகளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கடிதங்களை வரைந்துள்ளார்.

கடிதமொன்றின் உள்ளீடுகள்:

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப்புதைகுழிக்கு விஜயம் செய்யுமாறும் அவ்விடத்தை கையகப்படுத்துமாறும் உலகளாவிய ரீதியிலுள்ள தமிழ் மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்கள் சார்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது இக் கோரிக்கையை உடனடியாகக் கோருகிறது.

இலங்கை மீதான மனித உரிமைகள் சபையின் 2021ஆம் ஆண்டு தீர்மானத்தின் எட்டாம் பந்தி, சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறல் நடைமுறைக்காக, சாட்சியங்களை சேகரிக்க, உறுதிப்படுத்த, ஆராய, பாதுகாக்க மனித உரிமை ஆணையகத்திற்கு அதிகாரம் வழங்குகின்றது. எமது கோரிக்கை, ஆணையகத்திற்கு வழங்கப்பட்ட மேற்கூறிய அதிகாரத்திற்கு அமைகின்றது என நாம் நம்புகின்றோம்.

ஐக்கிய நாடுகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் செயற்குழு தமது அறிக்கையில் உலகத்தில் சிறிலங்காவில்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது என்று குறிப்பிட்டதை கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். 

சிறிலங்கா வலிந்து காணாமல் ஆக்கலை தமிழினவழிப்பின் ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. தமிழர் தாயகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அமைந்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட 33ஆவதான இந்தப் பாரிய மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடமானது யுத்தத்தின்போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதேவேளை புதைகுழிக்கருகில் பாரிய இராணுவ முகாமொன்று காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தங்களின் பிள்ளைகளின் நிலைகளை இதுவரையில் அறியாத வலிந்து காணமலாக்கப்பட்டோரின் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் உட்பட தமிழ் மக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே கண்டுபிடிக்கப்படுவதாக அஞ்சுகின்றனர்.

இதுதான் உண்மையெனில், உங்களுடைய அலுவலகத்தின் தலையீடில்லாமல் உண்மை எப்போதும் வெளிவராதென மேலதிகமான அச்சம் காணப்படுகிறது. உங்களது அலுவலகத்தின் தொழில் நிபுணத்துவமும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுவும் இந்த விடயத்தில் உடனடியாகத் தேவை.

பாரிய மனிதப் புதைகுழிகளுக்கு பேர்போனதாக சிறிலங்கா காணப்படுகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் 32 பாரிய மனிதப் புதைகுழிகள் (புதிய கண்டுபிடிப்பு 33ஆவதாகும்) இலங்கைத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

21 சிறுவர்களினது உள்ளடங்கலாக சித்திரவதை அடையாளங்களுடன் 276 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாக ஐக்கிய இராச்சியப் பத்திரிகையான த இன்டிபென்டென்ட் (The Independent) கடந்த 2018ஆம் ஆண்டில் செய்தி வெளியிட்டிருந்தது. 

1998ஆம் ஆண்டில், யாழ்ப்பாணக் குடாநாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து 1995,1996ஆம் ஆண்டில் இலங்கை இராணுவம் கைப்பற்றிய பின்னர் பிராந்தியத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணிக் கிராமத்துக்கு அருகிலுள்ள பாரிய மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக இலங்கைப் படைவீரரொருவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். 300 தொடக்கம் 400 பேர் வரையில் இறந்திருக்கலாமென அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல்போனவர்களின் குடும்பங்கள், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் இலங்கையில் பாரிய மனிதப் புதைகுழிகளும் தோல்வியடைந்த அகழ்வுகளும் (Mass Graves and Failed Exhumations in Sri Lanka) என்று தலைப்பிடப்பட்ட 75 பக்கங்களைக் கொண்ட, கடந்த மாதம் 20ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையானது பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது.

எந்தவொரு இலங்கை விசாரணை ஆணைக்குழுவும் பாரிய மனிதப் புதைகுழிகளை நோக்குகின்ற அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. உண்மையைக் கண்டறியும் நடவடிக்கைகள் தடுக்கப்படுகிறது. திடீரென நீதவான்கள், தடயவியல் நிபுணர்கள் இடமாற்றப்படுகின்றனர். 

சட்ட ஆணைகளை நிறைவேற்றுவதை பொலிஸ் தாமதப்படுத்துகிறது. சம்பவ இடங்களுக்கு குடும்பங்களின் வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. உயிருடனுள்ள சாட்சிகளைக் கண்டுபிடிப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இறப்பின் முன்னான எவ்வித தகவல்களும் சேகரிக்கப்படவில்லை. அரிதாக சிலர் குற்றவாளியாக்கப்பட்டால், அவர்கள் பின்னர் பொதுமன்னிப்பளிக்கப்படுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இது தீர்க்கமுடியாத துயரமாக உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உண்மையை அறியாமலே இறக்கிறார்கள்.

பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பான பொலிஸ் விசாரணைகளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தடுத்ததாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவால் 2014ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட “இலங்கை: பாரிய மனிதப் புதைகுழிகளின் புறக்கணிப்பு” அறிக்கையில் உங்களது கவனத்தைச் செலுத்த வைக்க விரும்புகின்றேன். 

குறிப்பாக இந்த அறிக்கை: பாரிய மனிதப் புதைகுழிகளை ஐக்கிய் நாடுகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான ஆணையாளர் நேரடியாக கண்காணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை உள்ளடங்கலாக சிறிலங்காவின் அரச கட்டுமானங்களில் பரவலான, வேரூன்றிய இனவாதம் காரணமாக தமிழ் மக்கள் ஒருபோதும் நீதியை உள்ளூர்ப் பொறிமுறை மூலம் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்தவகையில், உடனடியான அகழ்வுக்கான சர்வதேசப் பொறிமுறை ஒன்று, சாட்சியங்களைப் பாதுகாக்கவும், நீதியையும், பொறுப்புக்கூறலையும் நடைமுறைப் படுத்துவதற்கு அவசியம் என கடிதம் முடிவடைகின்றது.


இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 33வது மனித புதைகுழி நாடு கடந்த தமிமீழ அரசாங்கத்தால் ஐ.நாவுக்கு பறந்த அவசர கடிதம் samugammedia மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வொல்கர் துர்க்,( Mr. Volker Turk ) ஐக்கிய நாடுகளின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு விசாரணை ஆணையாளர் அல்பான் அலென்கஸ்றோ (Mr. Juan Pablo Alban Alencastro) ஆகியோருக்கு கடிதங்களை தனித்தனியாக அனுப்பியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முல்லைத்தீவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு பொறுப்பெடுக்குமாறும் அதற்கு அங்கு விஜயம் செய்து கையகப்படுத்துமாறும் அழைப்பு விடுத்துள்ளது.அகழ்வுப்பணி தொடர்ந்தும் நடைபெறுகையில் அதன் நடைமுறையையும், சர்வதேசக் குற்றங்களுக்கான ஆதாரத்தை நேர்மையாகப் பாதுகாக்கும் வகையில் அவசர கோரிக்கைகளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கடிதங்களை வரைந்துள்ளார்.கடிதமொன்றின் உள்ளீடுகள்:அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப்புதைகுழிக்கு விஜயம் செய்யுமாறும் அவ்விடத்தை கையகப்படுத்துமாறும் உலகளாவிய ரீதியிலுள்ள தமிழ் மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்கள் சார்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது இக் கோரிக்கையை உடனடியாகக் கோருகிறது.இலங்கை மீதான மனித உரிமைகள் சபையின் 2021ஆம் ஆண்டு தீர்மானத்தின் எட்டாம் பந்தி, சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறல் நடைமுறைக்காக, சாட்சியங்களை சேகரிக்க, உறுதிப்படுத்த, ஆராய, பாதுகாக்க மனித உரிமை ஆணையகத்திற்கு அதிகாரம் வழங்குகின்றது. எமது கோரிக்கை, ஆணையகத்திற்கு வழங்கப்பட்ட மேற்கூறிய அதிகாரத்திற்கு அமைகின்றது என நாம் நம்புகின்றோம்.ஐக்கிய நாடுகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் செயற்குழு தமது அறிக்கையில் உலகத்தில் சிறிலங்காவில்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது என்று குறிப்பிட்டதை கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். சிறிலங்கா வலிந்து காணாமல் ஆக்கலை தமிழினவழிப்பின் ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. தமிழர் தாயகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அமைந்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட 33ஆவதான இந்தப் பாரிய மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடமானது யுத்தத்தின்போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதேவேளை புதைகுழிக்கருகில் பாரிய இராணுவ முகாமொன்று காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.தங்களின் பிள்ளைகளின் நிலைகளை இதுவரையில் அறியாத வலிந்து காணமலாக்கப்பட்டோரின் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் உட்பட தமிழ் மக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே கண்டுபிடிக்கப்படுவதாக அஞ்சுகின்றனர்.இதுதான் உண்மையெனில், உங்களுடைய அலுவலகத்தின் தலையீடில்லாமல் உண்மை எப்போதும் வெளிவராதென மேலதிகமான அச்சம் காணப்படுகிறது. உங்களது அலுவலகத்தின் தொழில் நிபுணத்துவமும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுவும் இந்த விடயத்தில் உடனடியாகத் தேவை.பாரிய மனிதப் புதைகுழிகளுக்கு பேர்போனதாக சிறிலங்கா காணப்படுகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் 32 பாரிய மனிதப் புதைகுழிகள் (புதிய கண்டுபிடிப்பு 33ஆவதாகும்) இலங்கைத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 21 சிறுவர்களினது உள்ளடங்கலாக சித்திரவதை அடையாளங்களுடன் 276 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாக ஐக்கிய இராச்சியப் பத்திரிகையான த இன்டிபென்டென்ட் (The Independent) கடந்த 2018ஆம் ஆண்டில் செய்தி வெளியிட்டிருந்தது. 1998ஆம் ஆண்டில், யாழ்ப்பாணக் குடாநாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து 1995,1996ஆம் ஆண்டில் இலங்கை இராணுவம் கைப்பற்றிய பின்னர் பிராந்தியத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணிக் கிராமத்துக்கு அருகிலுள்ள பாரிய மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக இலங்கைப் படைவீரரொருவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். 300 தொடக்கம் 400 பேர் வரையில் இறந்திருக்கலாமென அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதேவேளை, ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல்போனவர்களின் குடும்பங்கள், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் இலங்கையில் பாரிய மனிதப் புதைகுழிகளும் தோல்வியடைந்த அகழ்வுகளும் (Mass Graves and Failed Exhumations in Sri Lanka) என்று தலைப்பிடப்பட்ட 75 பக்கங்களைக் கொண்ட, கடந்த மாதம் 20ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையானது பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது.எந்தவொரு இலங்கை விசாரணை ஆணைக்குழுவும் பாரிய மனிதப் புதைகுழிகளை நோக்குகின்ற அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. உண்மையைக் கண்டறியும் நடவடிக்கைகள் தடுக்கப்படுகிறது. திடீரென நீதவான்கள், தடயவியல் நிபுணர்கள் இடமாற்றப்படுகின்றனர். சட்ட ஆணைகளை நிறைவேற்றுவதை பொலிஸ் தாமதப்படுத்துகிறது. சம்பவ இடங்களுக்கு குடும்பங்களின் வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. உயிருடனுள்ள சாட்சிகளைக் கண்டுபிடிப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.இறப்பின் முன்னான எவ்வித தகவல்களும் சேகரிக்கப்படவில்லை. அரிதாக சிலர் குற்றவாளியாக்கப்பட்டால், அவர்கள் பின்னர் பொதுமன்னிப்பளிக்கப்படுகின்றனர்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இது தீர்க்கமுடியாத துயரமாக உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உண்மையை அறியாமலே இறக்கிறார்கள்.பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பான பொலிஸ் விசாரணைகளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தடுத்ததாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவால் 2014ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட “இலங்கை: பாரிய மனிதப் புதைகுழிகளின் புறக்கணிப்பு” அறிக்கையில் உங்களது கவனத்தைச் செலுத்த வைக்க விரும்புகின்றேன். குறிப்பாக இந்த அறிக்கை: பாரிய மனிதப் புதைகுழிகளை ஐக்கிய் நாடுகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான ஆணையாளர் நேரடியாக கண்காணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.நீதித்துறை உள்ளடங்கலாக சிறிலங்காவின் அரச கட்டுமானங்களில் பரவலான, வேரூன்றிய இனவாதம் காரணமாக தமிழ் மக்கள் ஒருபோதும் நீதியை உள்ளூர்ப் பொறிமுறை மூலம் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்தவகையில், உடனடியான அகழ்வுக்கான சர்வதேசப் பொறிமுறை ஒன்று, சாட்சியங்களைப் பாதுகாக்கவும், நீதியையும், பொறுப்புக்கூறலையும் நடைமுறைப் படுத்துவதற்கு அவசியம் என கடிதம் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement