• Nov 22 2024

தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல் வவுனியாவில் அனுஸ்டிப்பு..!

Sharmi / Sep 24th 2024, 11:34 am
image

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு தினம், இன்றையதினம்(24)  வவுனியாவில் உள்ள பொங்குதமிழ் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.

நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி கா.ஜெயவனிதாவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொங்கு தமிழ் தூபியில் சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல் வவுனியாவில் அனுஸ்டிப்பு. ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு தினம், இன்றையதினம்(24)  வவுனியாவில் உள்ள பொங்குதமிழ் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி கா.ஜெயவனிதாவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.அதனை தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொங்கு தமிழ் தூபியில் சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.இவ் நினைவேந்தல் நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement