• Mar 12 2025

பலத்த மழையால் நிரம்பி வழியும் 42 நீர்த்தேக்கங்கள்!

Chithra / Mar 12th 2025, 10:23 am
image

 

நாடு முழுவதும் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் இன்று புதன்கிழமை காலை  நிலவரப்படி பலத்த மழையினால் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 07, அநுராதபுரத்தில் 06, பதுளையில் 05, பொலன்னறுவையில் 03 மற்றும்  திருகோணமலையில் 03 நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றன.

மின்னேரியா, கவுடுல்ல, கந்தளாய், இராஜாங்கனை, லுணுகம்வெஹெர, சேனநாயக்க சமுத்திரம் மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகியவை நீர்நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்களில் முக்கியமானவை என  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர் நிரம்பி வழிந்தாலும் நீர்த்தேக்கங்களில் மொத்த நீர் சேமிப்பு திறனில் 93 சதவீதத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பலத்த மழையால் நிரம்பி வழியும் 42 நீர்த்தேக்கங்கள்  நாடு முழுவதும் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் இன்று புதன்கிழமை காலை  நிலவரப்படி பலத்த மழையினால் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 07, அநுராதபுரத்தில் 06, பதுளையில் 05, பொலன்னறுவையில் 03 மற்றும்  திருகோணமலையில் 03 நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றன.மின்னேரியா, கவுடுல்ல, கந்தளாய், இராஜாங்கனை, லுணுகம்வெஹெர, சேனநாயக்க சமுத்திரம் மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகியவை நீர்நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்களில் முக்கியமானவை என  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து நீர் நிரம்பி வழிந்தாலும் நீர்த்தேக்கங்களில் மொத்த நீர் சேமிப்பு திறனில் 93 சதவீதத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement