• Apr 02 2025

திடீர் சுற்றிவளைப்பு - 2 மணித்தியாலங்களில் சிக்கிய 49 பேர்..!

Chithra / Jul 2nd 2024, 1:19 pm
image

  

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்ற விசேட நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதன்போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் 13 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

குற்றத்தடுப்பு விசேட கடமையின் கீழ் கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் ஜம்பட்டா போதிக்கு அருகில் உள்ள வீதியை மூடி சுமார் 2 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விசேட நடவடிக்கைக்காக, எட்டு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் போதைப்பொருள் கையாள்வதில் விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரிகளும் ஈடுபட்டிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திடீர் சுற்றிவளைப்பு - 2 மணித்தியாலங்களில் சிக்கிய 49 பேர்.   நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்ற விசேட நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்இதன்போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் 13 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றத்தடுப்பு விசேட கடமையின் கீழ் கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் ஜம்பட்டா போதிக்கு அருகில் உள்ள வீதியை மூடி சுமார் 2 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் இந்த விசேட நடவடிக்கைக்காக, எட்டு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் போதைப்பொருள் கையாள்வதில் விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரிகளும் ஈடுபட்டிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now