• Dec 08 2024

இந்துப் பாரம்பரிய மரபுகளை அழித்து சிவபூமியை கிறிஸ்தவ பூமியாக்காதே...! யாழில் இந்து அமைப்புக்கள் போராட்டம்...!

Sharmi / Jul 2nd 2024, 1:50 pm
image

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளரைப் பதவி நீக்க வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை சிவசேனை மற்றும் உருத்திர சேனை ஆகிய இரண்டு இந்து அமைப்புக்கள் இணைந்து யாழிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று(02) காலை இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேலும், இந்துப் பாரம்பரிய மரபுகளை அழித்து சிவபூமியை கிறிஸ்தவ பூமியாக்காதே, தமிழர் கல்வி கலாச்சார பண்பாடுகளை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குளிப்பிடத்தக்கது. 

இதன் போது போராட்டகாரர்கள் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டவர் தனது அலுவலத்தில் இருந்த இந்து கடவுள்களின் படங்களை அகற்றியதனை வன்மையாக கண்டிக்கிறோம். 

இங்கு மதவெறியை தூண்டும் வகையில் மதவெறி தனமாக செயற்படுகின்ற இவரைப் போன்றவர்கள் உடனடியாக பதவி நீக்கப்பட வேண்டுமென வடக்கு ஆளுநரிடம் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். 

ஆனால், ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் போராட்டத்தை நடாத்துகிறோம். ஆகையினால் இனிமேலும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதுவிட்டால் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


இந்துப் பாரம்பரிய மரபுகளை அழித்து சிவபூமியை கிறிஸ்தவ பூமியாக்காதே. யாழில் இந்து அமைப்புக்கள் போராட்டம். யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளரைப் பதவி நீக்க வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இலங்கை சிவசேனை மற்றும் உருத்திர சேனை ஆகிய இரண்டு இந்து அமைப்புக்கள் இணைந்து யாழிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று(02) காலை இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.மேலும், இந்துப் பாரம்பரிய மரபுகளை அழித்து சிவபூமியை கிறிஸ்தவ பூமியாக்காதே, தமிழர் கல்வி கலாச்சார பண்பாடுகளை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குளிப்பிடத்தக்கது. இதன் போது போராட்டகாரர்கள் கருத்து தெரிவிக்கையில்,யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டவர் தனது அலுவலத்தில் இருந்த இந்து கடவுள்களின் படங்களை அகற்றியதனை வன்மையாக கண்டிக்கிறோம். இங்கு மதவெறியை தூண்டும் வகையில் மதவெறி தனமாக செயற்படுகின்ற இவரைப் போன்றவர்கள் உடனடியாக பதவி நீக்கப்பட வேண்டுமென வடக்கு ஆளுநரிடம் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் போராட்டத்தை நடாத்துகிறோம். ஆகையினால் இனிமேலும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதுவிட்டால் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement