மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் இன்று (24) காலை ஏற்பட்ட விபத்தில் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 5 பேர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சேருவில பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி வருகைதந்த பிக்கப் ரக வாகனம் , ஈச்சிலம்பற்று நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி , தரித்து நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீதியில் நின்றவர்கள் மீது மோதியுள்ளதாக தெரியவருகிறது.
விபத்தில் பின்னர் கைகலப்பாக மாறியதையடுத்து குறித்த இடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரச்சினை சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குமாரபுரம் விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் இன்று (24) காலை ஏற்பட்ட விபத்தில் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 5 பேர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சேருவில பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி வருகைதந்த பிக்கப் ரக வாகனம் , ஈச்சிலம்பற்று நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி , தரித்து நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீதியில் நின்றவர்கள் மீது மோதியுள்ளதாக தெரியவருகிறது.விபத்தில் பின்னர் கைகலப்பாக மாறியதையடுத்து குறித்த இடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரச்சினை சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டது.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.