• May 22 2024

யாழில் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டிய 5 விடயங்கள்; அரச அதிபரிடம் யாழ்.மாவட்ட சர்வமதப் பேரவையினர் மகஜர் கையளிப்பு!!Samugammedia

Tamil nila / Dec 18th 2023, 11:12 pm
image

Advertisement

யாழ் மாவட்டத்தின் இன்றைய யதார்த்த நிலைமையில் முக்கிய சில கோரிக்கைகளை  முன்வைத்து அவற்றை நடைமுறைப்படுத்துமாறு கோரி யாழ் மாவட்ட அரச அதிபரிடம் சர்வமதப் பேரவையினர் மகஜர் ஒன்றை இன்றையதினம் அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளித்துள்ளனர். 

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளாவன,

தங்களுடைய அறிவிப்பின்படி தனிப்பட்ட பிரத்தியோக வகுப்புகளை குறிப்பிட்ட சில நாட்களில் தடை செய்துள்ளமைக்கு எமது உடன்பாட்டையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.

எமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி சில இடங்களில் பிரத்தியோக பகுப்புகள் நடைபெறுகின்றன அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கைது செய்யப்பட்டவர்கள் சிலர் சட்ட ஒழுங்குகளுக்கு மாறாக காவல்துறையினரின் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பாரிய துன்புறுத்தவர்களை எதிர்கொண்டுள்ளனர். கைதிகள் உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

யாழ் குடாநாட்டில் வன்முறை கலாச்சாரம் தொடரும் நிலை முற்றாக நிறுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காவல்துறையினருடன் இணைந்து வன்முறை கலாச்சாரத்தை அகற்றும் செயல்பாடுகள் மேற்கொள்ள கிராமிய கட்டமைப்புகளை உருவாக்குதல் சிறந்தது இந்த ஒழுங்கு போதை பொருள் பாவனை தடை செய்ய அல்லது குறைக்க நிச்சயம் உதவும்.

மாவட்ட ரீதியான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்கின்றோம்.

அரச நிறுவனங்கள் அரசு சார்பற்ற நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் சமய நிறுவனங்கள் அனைத்தும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி செய்வது அவசியம்.



கொள்வனவு  மற்றும் விற்பனையில் நேர்மை உறுதி செய்யப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறமை  அவசியம் .

திடீர் சோதனைகள் மேற்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீட்டர் அளவுகளை பரிசோதிக்க வேண்டும். அத்துடன் கடைகள் சந்தைகள் இறைச்சி கடைகள் என்பவற்றிலும் திடீர் சோதனைகளை செய்வது நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தடுக்கும், 

மேற்குறிப்பிட்ட விடயங்கள் உட்பட முக்கியமானவற்றை தாங்கள் நடைமுறைப்படுத்தும் போது எமது ஒத்துழைப்பு உடன் இருக்கும் என்பதை தெரிவிக்கின்றோம் என்றுள்ளது. 

குறித்த சந்திப்பில் வண.கிருபானந்த குருக்கள், வண.ஶ்ரீவிமல தேரர், யாழ் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை. ஜெபரட்ணம், அருட்பணி. SpD. செல்வன், அருட்பணி. ராஜா, மெளலவி. ரஹீம், அருட்பணி. இ. ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழில் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டிய 5 விடயங்கள்; அரச அதிபரிடம் யாழ்.மாவட்ட சர்வமதப் பேரவையினர் மகஜர் கையளிப்புSamugammedia யாழ் மாவட்டத்தின் இன்றைய யதார்த்த நிலைமையில் முக்கிய சில கோரிக்கைகளை  முன்வைத்து அவற்றை நடைமுறைப்படுத்துமாறு கோரி யாழ் மாவட்ட அரச அதிபரிடம் சர்வமதப் பேரவையினர் மகஜர் ஒன்றை இன்றையதினம் அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளித்துள்ளனர். குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளாவன,தங்களுடைய அறிவிப்பின்படி தனிப்பட்ட பிரத்தியோக வகுப்புகளை குறிப்பிட்ட சில நாட்களில் தடை செய்துள்ளமைக்கு எமது உடன்பாட்டையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.எமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி சில இடங்களில் பிரத்தியோக பகுப்புகள் நடைபெறுகின்றன அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கைது செய்யப்பட்டவர்கள் சிலர் சட்ட ஒழுங்குகளுக்கு மாறாக காவல்துறையினரின் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பாரிய துன்புறுத்தவர்களை எதிர்கொண்டுள்ளனர். கைதிகள் உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.யாழ் குடாநாட்டில் வன்முறை கலாச்சாரம் தொடரும் நிலை முற்றாக நிறுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.காவல்துறையினருடன் இணைந்து வன்முறை கலாச்சாரத்தை அகற்றும் செயல்பாடுகள் மேற்கொள்ள கிராமிய கட்டமைப்புகளை உருவாக்குதல் சிறந்தது இந்த ஒழுங்கு போதை பொருள் பாவனை தடை செய்ய அல்லது குறைக்க நிச்சயம் உதவும்.மாவட்ட ரீதியான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்கின்றோம்.அரச நிறுவனங்கள் அரசு சார்பற்ற நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் சமய நிறுவனங்கள் அனைத்தும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி செய்வது அவசியம்.கொள்வனவு  மற்றும் விற்பனையில் நேர்மை உறுதி செய்யப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறமை  அவசியம் .திடீர் சோதனைகள் மேற்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீட்டர் அளவுகளை பரிசோதிக்க வேண்டும். அத்துடன் கடைகள் சந்தைகள் இறைச்சி கடைகள் என்பவற்றிலும் திடீர் சோதனைகளை செய்வது நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தடுக்கும், மேற்குறிப்பிட்ட விடயங்கள் உட்பட முக்கியமானவற்றை தாங்கள் நடைமுறைப்படுத்தும் போது எமது ஒத்துழைப்பு உடன் இருக்கும் என்பதை தெரிவிக்கின்றோம் என்றுள்ளது. குறித்த சந்திப்பில் வண.கிருபானந்த குருக்கள், வண.ஶ்ரீவிமல தேரர், யாழ் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை. ஜெபரட்ணம், அருட்பணி. SpD. செல்வன், அருட்பணி. ராஜா, மெளலவி. ரஹீம், அருட்பணி. இ. ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement