பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்திய 51 பாடசாலை ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பாடசாலைகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சிங்களம் உள்ளிட்ட பாடங்களுக்குப் பணம் வசூலித்து பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் தொடர்பில் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசேட சுற்றுநிரூபம் ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த சுற்றுநிரூபத்தை மீறி சில ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய மாகாண கல்வி அமைச்சும் விசேட சுற்றிவளைப்பு பிரிவை நிறுவி உரிய இடங்களில் சோதனை நடத்தியது.
இதன்போது சில ஆசிரியர்கள் தமது வகுப்பு மாணவர்களை மேலதிக வகுப்பில் பங்கேற்குமாறு அழுத்தம் கொடுப்பதாக கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சுற்றுநிரூபத்தை மீறிய ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுநிரூபத்தை மீறிய 51 பாடசாலை ஆசிரியர்களுக்கு அதிரடி இடமாற்றம். பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்திய 51 பாடசாலை ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பாடசாலைகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சிங்களம் உள்ளிட்ட பாடங்களுக்குப் பணம் வசூலித்து பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் தொடர்பில் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசேட சுற்றுநிரூபம் ஒன்று வெளியிடப்பட்டது.இந்த சுற்றுநிரூபத்தை மீறி சில ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய மாகாண கல்வி அமைச்சும் விசேட சுற்றிவளைப்பு பிரிவை நிறுவி உரிய இடங்களில் சோதனை நடத்தியது.இதன்போது சில ஆசிரியர்கள் தமது வகுப்பு மாணவர்களை மேலதிக வகுப்பில் பங்கேற்குமாறு அழுத்தம் கொடுப்பதாக கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் சுற்றுநிரூபத்தை மீறிய ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.