தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
286 சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் 171 பேர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களில் நீதிமன்ற பிடியாணையில் தேடப்பட்ட 65 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
'ஐஸ்' போதைப்பொருளை வைத்திருந்ததற்காக 26 பேர் மீதும், கஞ்சா வைத்திருந்ததற்காக 28 பேர் மீதும் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
போதையில் வாகனம் ஓட்டியதற்காக 66 பேர் உட்பட மொத்தம் 649 பேருக்கு எதிராக போக்குவரத்து தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது 28 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 77 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகளின் உறுப்பினர்கள் உட்பட 1,584 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தென்னிலங்கையில் விசேட சோதனை -ஒரே இரவில் 457 பேர் கைது தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.286 சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் 171 பேர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களில் நீதிமன்ற பிடியாணையில் தேடப்பட்ட 65 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.'ஐஸ்' போதைப்பொருளை வைத்திருந்ததற்காக 26 பேர் மீதும், கஞ்சா வைத்திருந்ததற்காக 28 பேர் மீதும் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.போதையில் வாகனம் ஓட்டியதற்காக 66 பேர் உட்பட மொத்தம் 649 பேருக்கு எதிராக போக்குவரத்து தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இந்த நடவடிக்கையின் போது 28 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 77 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த நடவடிக்கையில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகளின் உறுப்பினர்கள் உட்பட 1,584 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.