• May 01 2024

26 நாட்களில் 55 பேருக்குத் தூக்கு தண்டனை! உலகை உலுக்கும் ஈரானின் மரண தண்டனைகள்

Chithra / Jan 29th 2023, 8:16 am
image

Advertisement

இந்த ஆண்டில் துவங்கி கடந்த 26ம் தேதிக்குள் மட்டும் 55 பேர் ஈரானில் தூக்கிலிடப்பட்டுள்ளதாக நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

ஹிஜாப் போராட்டக்காரர்களுக்கு எதிரான ஈரான் அரசின் மரண தண்டனைகள் உலகையே உலுக்கி வருகின்றன. 

இந்நிலையில், போராட்டங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் 18 வயதே நிரம்பியவர்கள் என்றும், காவலில் "கொடூரமான சித்திரவதைக்கு" உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 4 பேரும், அதே நேரத்தில் பெரும்பாலான குற்றவாளிகள் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகவும் தூக்கிலிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 107 பேர் மரண தண்டனை விதிக்கப்படும் அபாயங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


26 நாட்களில் 55 பேருக்குத் தூக்கு தண்டனை உலகை உலுக்கும் ஈரானின் மரண தண்டனைகள் இந்த ஆண்டில் துவங்கி கடந்த 26ம் தேதிக்குள் மட்டும் 55 பேர் ஈரானில் தூக்கிலிடப்பட்டுள்ளதாக நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.ஹிஜாப் போராட்டக்காரர்களுக்கு எதிரான ஈரான் அரசின் மரண தண்டனைகள் உலகையே உலுக்கி வருகின்றன. இந்நிலையில், போராட்டங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் 18 வயதே நிரம்பியவர்கள் என்றும், காவலில் "கொடூரமான சித்திரவதைக்கு" உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.போராட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 4 பேரும், அதே நேரத்தில் பெரும்பாலான குற்றவாளிகள் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகவும் தூக்கிலிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 107 பேர் மரண தண்டனை விதிக்கப்படும் அபாயங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement