• Nov 24 2024

பங்களாதேஷில் வேலை ஒதுக்கீடு தொடர்பான போராட்டம்: வன்முறையில் 6 மாணவர்கள் பலி!

Tamil nila / Jul 17th 2024, 6:46 pm
image

பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொலிஸார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள்,பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

பங்களாதேஷில் வேலை ஒதுக்கீடு தொடர்பான போராட்டம்: வன்முறையில் 6 மாணவர்கள் பலி பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.இப்போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பொலிஸார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள்,பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement