சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 51 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இந்த ஊழியர்கள் அனைவரும் காசாளர்கள் என மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
நேற்றைய தினமும் 15 காசாளர்கள் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.
இதன்படி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
மின்சாரம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 3, 4 மற்றும் 5ம் திகதிகளில் மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள் 66 பேர் அதிரடியாக பணிநீக்கம். சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 51 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இந்த ஊழியர்கள் அனைவரும் காசாளர்கள் என மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். நேற்றைய தினமும் 15 காசாளர்கள் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.இதன்படி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.மின்சாரம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 3, 4 மற்றும் 5ம் திகதிகளில் மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால் பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக மின்சார சபை அறிவித்துள்ளது.