• Nov 24 2024

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் 20 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 67 பேர் கைது!

Chithra / Oct 22nd 2024, 10:07 am
image


இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,045 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 81 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகள், மூன்று கிராம சேவை அதிகாரிகள், 3 நீதிபதிகள், இரண்டு வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் அடங்குவர்.

மேலும், இது தொடர்பான சோதனையில் 22 பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 68 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த காலப்பகுதியில் 56 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் 20 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 67 பேர் கைது இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,045 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 81 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகள், மூன்று கிராம சேவை அதிகாரிகள், 3 நீதிபதிகள், இரண்டு வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் அடங்குவர்.மேலும், இது தொடர்பான சோதனையில் 22 பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 68 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த காலப்பகுதியில் 56 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement