• Nov 25 2024

கட்டுநாயக்கவிலிருந்து புறப்படவிருந்த 7 விமான சேவைகள் திடீரென இரத்து!

Chithra / Feb 27th 2024, 12:47 pm
image

 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த சில விமானங்களின்  பயணங்கள்  இன்று (27) இரத்துச்  செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படவிருந்த 7 விமானங்களே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின்  பேச்சாளர்  ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சேவைகள் இரத்துச் செய்யப்பட்ட விமானங்களில்  6 விமானங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை  என தெரியவருகின்றது.

இதேவேளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சேவையாற்றிய 160 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் தொழிலை  விட்டு வெளியேறியுள்ளனர் 

இதன் காரணமாக  தற்போது 250 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அங்கு பணிபுரிவதாக அதன் விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கூற்றுப்படி, 415 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சேவைக்கு தேவை என தெரிவித்துள்ளனர்.

விமான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு  வெளிநாடுகளின் முக்கிய விமான நிறுவனங்களில் அதிக தேவை இருப்பதாகவும் அதன் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

கட்டுநாயக்கவிலிருந்து புறப்படவிருந்த 7 விமான சேவைகள் திடீரென இரத்து  கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த சில விமானங்களின்  பயணங்கள்  இன்று (27) இரத்துச்  செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படவிருந்த 7 விமானங்களே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின்  பேச்சாளர்  ஒருவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு சேவைகள் இரத்துச் செய்யப்பட்ட விமானங்களில்  6 விமானங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை  என தெரியவருகின்றது.இதேவேளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சேவையாற்றிய 160 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் தொழிலை  விட்டு வெளியேறியுள்ளனர் இதன் காரணமாக  தற்போது 250 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அங்கு பணிபுரிவதாக அதன் விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கூற்றுப்படி, 415 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சேவைக்கு தேவை என தெரிவித்துள்ளனர்.விமான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு  வெளிநாடுகளின் முக்கிய விமான நிறுவனங்களில் அதிக தேவை இருப்பதாகவும் அதன் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement