• May 02 2026

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வு!

Ziya / Feb 4th 2026, 2:25 pm
image

திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வானது இன்று (04)  நடைபெற்றுள்ளது.


குறித்த நிகழ்வு மாவட்ட அரச அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்றது.


தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


"இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" (Let us build Sri Lanka) எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


சர்வ மத தலைவர்களின் பங்கேற்புடன்  இடம்பெற்ற, இந்த நிகழ்வில், இலங்கையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்லின கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. கலை கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வானது இன்று (04)  நடைபெற்றுள்ளது.குறித்த நிகழ்வு மாவட்ட அரச அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்றது.தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது."இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" (Let us build Sri Lanka) எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.சர்வ மத தலைவர்களின் பங்கேற்புடன்  இடம்பெற்ற, இந்த நிகழ்வில், இலங்கையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்லின கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. கலை கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement