• Jan 26 2025

வவுனியாவில் 80 வீதமான உழுந்து செய்கை பாதிப்பு

Chithra / Jan 24th 2025, 2:15 pm
image

 தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில்  80 வீதமான உழுந்து செய்கை  முழுமையாக பாதிக்கப்படைந்துள்ளது.

வவுனியா மாவட்டம் உழுந்து செய்கையில் பிரதானமாக காணப்படும் நிலையில் செய்கையின் அறுவடை காலம் நெருங்கி இருந்த சமயத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ததன் காரணமாக உழுந்து மரத்திலேயே முளைத்து காணப்படுகின்றது.

இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் உழுந்து செய்கையை கைவிட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலட்சங்களை செலவழித்து உழுந்து செய்கை மேற்கொண்ட நிலையில் இவ்வாறான ஒரு துர்பாக்கிய நிலைமை தமக்கு ஏற்பட்டிருப்பது தொடர்பில் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே உழுந்து செய்கையாளர்களுக்கு நஷ்டஈட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் கேட்டபோது,

இம்முறை 13961 ஏக்கர் உழுந்து செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 11231 ஏக்கர் முழுமையாக அழிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 1160 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கையும் அழிவடைந்துள்ளது.


வவுனியாவில் 80 வீதமான உழுந்து செய்கை பாதிப்பு  தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில்  80 வீதமான உழுந்து செய்கை  முழுமையாக பாதிக்கப்படைந்துள்ளது.வவுனியா மாவட்டம் உழுந்து செய்கையில் பிரதானமாக காணப்படும் நிலையில் செய்கையின் அறுவடை காலம் நெருங்கி இருந்த சமயத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ததன் காரணமாக உழுந்து மரத்திலேயே முளைத்து காணப்படுகின்றது.இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் உழுந்து செய்கையை கைவிட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதேவேளை இலட்சங்களை செலவழித்து உழுந்து செய்கை மேற்கொண்ட நிலையில் இவ்வாறான ஒரு துர்பாக்கிய நிலைமை தமக்கு ஏற்பட்டிருப்பது தொடர்பில் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே உழுந்து செய்கையாளர்களுக்கு நஷ்டஈட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இவ்விடயம் தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் கேட்டபோது,இம்முறை 13961 ஏக்கர் உழுந்து செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 11231 ஏக்கர் முழுமையாக அழிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 1160 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கையும் அழிவடைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement